போக்குவரத்து பெண் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
கோடம்பாக்கம், வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்ட போக்குவரத்து பெண் எஸ்.ஐ., மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.கோடம்பாக்கம் போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக கலைவாணி என்பவர் பணியில் இருந்தார். அவர், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு சென்றது.இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி ஆய்வாளர் கலைவாணி மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக செயல்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் அய்யப்பன் ஆகிய இருவரையும், ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார்.