உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் வெங்கட் சி.சி., அணி அபாரம்

ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் வெங்கட் சி.சி., அணி அபாரம்

சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்களுக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன. அந்த வகையில் வெங்கட் சி.சி., அணியும், மெட்ராஸ் இம்மானுவேல் சி.சி., அணியும், திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் கோல்டன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. வெங்கட் சி.சி., அணி 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் அடித்தது. அணி வீரர் கோகுல்மூர்த்தி சதமடித்து 104 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய மெட்ராஸ் இம்மானுவேல் சி.சி., அணி 44.1 ஓவரில் 217 ரன்கள் மட்டும் அடித்து 'ஆல் அவுட்' ஆனது. இதனால் வெங்கட் சி.சி., அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற் றொரு போட்டியில் ஜேம்ஸ் சி.சி., அணியை தோற்கடித்து, பிரசாத் சி.சி., அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை