போலீசாருக்கு முதலுதவி பயிற்சி
சென்னை:விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, சென்னையில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டது.இதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று, டாக்டர் மோகன்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், முதலுதவி சிகிச்சை செய்யும் முறையை, போக்குவரத்து போலீசாருக்கு செய்முறையுடன் விளக்கினர்.இதில், போக்குவரத்து போலீசார் 50 பேர் பங்கேற்றனர். இதேபோல, சுழற்சி முறையில் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.