வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குஜராத் விமான விபத்து இதயத்தை பிழிய வைக்கும் சோகம். விமான சேவை அதிகரிக்கும் இந்தத்தருணத்தில் நிறுவனங்கள் பயணிகளின் உயிரில் அக்கறை கொள்ள வேண்டும்
சென்னை:சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகருக்கு செல்லும் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று காலை 9:50 மணிக்கு புறப்படத் தயாரானது. விமானத்தில் 312 பயணியர் உட்பட 326 பேர் இருந்தனர்.விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, விமான பொறியாளர் குழுவினர், விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணியர் விமானத்திற்கு உள்ளே அமர வைக்கப்பட்டிருந்தனர். இரண்டு மணி நேரமாகியும், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சீரமைக்க முடியவில்லை. இதையடுத்து, பகல் 12:20 மணிக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின் பயணியர் அனைவரும், விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். அவசரமாக, துபாய் செல்லும் சில பயணியர் மட்டும், வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.மற்ற 300க்கும் மேற்பட்ட பயணியர், அதிருப்தியுடன் வீடு திரும்பினர்.
குஜராத் விமான விபத்து இதயத்தை பிழிய வைக்கும் சோகம். விமான சேவை அதிகரிக்கும் இந்தத்தருணத்தில் நிறுவனங்கள் பயணிகளின் உயிரில் அக்கறை கொள்ள வேண்டும்