உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆரோக்கியமாக வாழ உணவு தேர்வு முக்கியம்

ஆரோக்கியமாக வாழ உணவு தேர்வு முக்கியம்

சென்னை,''ஆரோக்கியமாக வாழ, உண்ணும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும்,'' என, அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.அப்பல்லோ மருத்துவமனை குழுமம் சார்பில், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆங்கில மொழியில் எழுதிய, 'மை புட், மை ஹெல்த்' எனும் 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.இதில், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் அவரது மனைவி சுசரிதா ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புத்தகத்தை வெளியிட்டனர்.தெடர்ந்து, பிரதாப் ரெட்டி பேசியதாவது:ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி, சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவில்லை எனில், நோய்களை நம் உடல் எளிதில் உள்வாங்கி விடும். நோய்களைத் தடுக்க, உணவு முறை மிக முக்கியமானது.தொற்று அல்லாத நோய்கள் அனைத்து வயதினரையும் பாதித்து வருகின்றன. உணவு குறித்தும், ஆரோக்கியம் குறித்தும், தகவல் அறிந்து செயல்படுவது தொடர்பான அறிவைக் கற்பிக்க வேண்டும்.ஆரோக்கியமாக வாழ உணவு தேர்வு முக்கியமானது. உண்ணும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். உணவில் எதை எடுத்துக் கொள்ளலாம். எதை தவிர்க்கலாம் என்பது குறித்து, நமக்குள் ஒரு தேர்வு நடத்த வேண்டும்.ஆராய்ச்சி மற்றும் பல ஆண்டு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த புத்தகத்தின் வாயிலாக, ஒரு சிறந்த, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான தேசத்தை கட்டமைக்க முயற்சி செய்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி