மேலும் செய்திகள்
உணவு டெலிவரி ஊழியர் சாலை விபத்தில் பலி
13-Sep-2025
சோழிங்கநல்லுார்: ஒக்கியம்பேட்டையில், பைக் மீது ஸ்கூட்டர் மோதியதில், உணவு டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாத் சாகு, 27. இவர், 'ஆன்லைன்' உணவு வினியோக செயலி வாயிலாக, உணவு டெலிவரி செய்யும் பணி மேற்கொண்டு வந்தார். வழக்கம்போல, நேற்று அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்த ஜெகன்நாத் சாகு, தன் 'யமஹா எப்.இசட்' பைக்கில் துரைப்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஒக்கியம்பேட்டை அருகில் சென்றபோது, தி டீரென அணுகுசாலையில் இருந்து ஒக்கியம்பேட்டை நோக்கி வேகமாக வந்த, மற்றொரு உணவு டெலிவரி ஊழியரின் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர், ஜெகன்நாத் சாகுவின் வாகனத்தில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ஜெகன்நாத் சாகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய அய்யனார், 26, என்பவரை, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கைது செய்து விசாரிக்கின்றனர்.
13-Sep-2025