கால்பந்து மரைன் - போஸ்டல் டிரா
நேற்று நடந்த போட்டியில், ஆக்டோபஸ் மரைன் அணி, மெட்ராஸ் போஸ்டல் அணியை எதிர்கொண்டது. போட்டி துவங்கி, முதல் 45 நிமிடங்கள் வரை, இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் பாதி 0 - 0 என, சம நிலையில் முடிந்தது.இரண்டாவது பாதியில், தன் வேகத்தை கூட்டிய ஆக்டோபஸ் மரைன் அணி, வெற்றிக்கான முயற்சியை துவங்கியது.போட்டியின் 48வது நிமிடத்தில், அந்த அணியின் வீரர் அரவிந்த், தன் அணிக்காக முதல் கோலை அடித்தார்.இதையடுத்து மெட்ராஸ் போஸ்டல் அணி, 'மிட்' திசையில் இருந்து முன்னேறி, அட்டாக் திசையில் விளையாட துவங்கியது. இதனால் 60வது நிமிடத்தில், மெட்ராஸ் போஸ்டல் அணி வீரர் பவளவன் ஒரு கோல் அடித்து, தன் அணியை தோல்வியில் இருந்து மீட்டார். போட்டி முடிவில் இரு அணிகளும், தலா ஒரு கோல் அடித்திருந்ததால், ஆட்டம் 1 - 1 என டிராவில் முடிந்தது.