மேலும் செய்திகள்
'ஆயுள்' கைதி திடீர் மரணம்
08-Mar-2025
புழல்,புழல் மத்திய பெண்கள் சிறையில், 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உள்ளிட்ட வழக்குகளில் கைதான வெளிநாட்டு பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சட்டவிரோத நுழைவு தொடர்பாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நோபார் ஓன்யேன் மோனிகாவுக்கும், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ப்ரைலைன் பெத்மேருக்கும் திடீர் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் தென் ஆப்ரிக்க கைதிக்கு காயம் ஏற்பட்டது.இருவரையும் சிறை பெண் போலீசார் சமாதானப்படுத்தினர். காயமடைந்த கைதிக்கு, சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, புழல் போலீசார் நைஜீரிய பெண் கைதி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஆணி விழுங்கிதற்கொலைக்குமுயன்ற கைதிபுழல், மார்ச் 19-சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் அஜித், 26. கடந்த வாரம் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.இவரது தாய், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவரை பார்க்க செல்லவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட யாரும் அஜித்தை பார்க்க சிறைக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த அஜித், நேற்று முன்தினம் இரவு சிறையில் கீழே கிடந்த ஆணியை எடுத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சக கைதிகள், சிறை அலுவலர்களிடம் தெரிவித்தனர்.இதையடுத்து, சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Mar-2025