உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான்காம் டிவிஷன் கால்பந்து லீக் சென்னை டைட்டன் அணி வெற்றி

நான்காம் டிவிஷன் கால்பந்து லீக் சென்னை டைட்டன் அணி வெற்றி

சென்னை, ஆடவருக்கான நான்காம் டிவிஷன் கால்பந்து போட்டியில், சென்னை டைட்டன் அணி, 5 - 0 என்ற கோல் கணக்கில், கிரான்ட் இன் எப்.சி., அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. சென்னை கால்பந்து சங்கம் சார்பில், ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை கண்ணப்பர் திடல் மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில், சென்னை டைட்டன் அணி, கிரான்ட் இன் எப்.சி., அணியை எதிர்த்து மோதியது. இதில், சென்னை டைட்டன் அணியின் சிறப்பான ஆட்டத்தால், கிரான்ட் இன் எப்.சி., அணியை, 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. சென்னை டைட்டன் அணி சார்பில் ரவி, ஜெயக்குமார், ஆகாஷ், சூர்யா, யுஹான் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். மற்றொரு போட்டியில் சென்னை சாம்பியன், சென்னை ஸ்போர்டிங் அணிகள் மோதின.இரு அணியின் தடுப்பும் வலுவாக அமைந்ததால் போட்டி முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம், 'டிரா'வில் முடிந்தது.சென்னை சாம்பியன் சார்பில், சுனில் 30வது நிமிடத்தில் ஒரு கோல், சென்னை ஸ்போர்டிங் சார்பில், 20வது நிமிடத்தில் வெற்றிவேல் ஒரு கோல் அடித்தார்.அடுத்த போட்டியில், கிரான்ட் இன் எப்.சி., அணி, சுபாஷ் சந்திர போஸ் அணியை எதிர்த்துப் போட்டியிட்டது. இதில், சுபாஷ் சந்திர போஸ் அணி, 2-0 என்ற கோல் கணக்கில், கிரான்ட் இன் எப்.சி., அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.சுபாஷ் சந்திர போஸ் அணி சார்பில், அஜித் 8 வது நிமிடத்திலும், கணேஷ் 57 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி