உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரூப் – 2 தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை தொடக்கம்

குரூப் – 2 தேர்வுக்கு இலவச பயிற்சி நாளை தொடக்கம்

சென்னை, செப். 2– ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2, குரூப் – 2 ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்கும்’ என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். கலெக்டர் மாலதி ெஹலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான ​டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 2, குரூப் – 2 ஏ, தேர்விற்கான பயிற்சி வகுப்பு, நாளை காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. பயிற்சியில் சேர விரும்புவோர், https://forms.gle/z3LzaGSpNeA1djJ76 என்ற படிவத்தில், தங்கள் விவரங்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடியாக அணுகலாம். மேலும், gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை