மேலும் செய்திகள்
இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நாளை நடக்கிறது
03-May-2025
நங்கநல்லுார், நங்கநல்லுார், 167வது வார்டு தி.மு.க., சார்பில் ஜெம் மருத்துவமனை, ஆண்டர்சன் ரத்த பரிசோதனை நிலையம், கிளவுடு நயன் பல் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ முகாமை இன்று நடத்துகிறது.நங்கநல்லூர் 6வது பிரதான சாலை அமைந்துள்ள சுதந்திர தின பூங்காவில், காலை 9:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை நடத்தப்படும் இந்த முகாமில், வயிறு கோளாறுகள், குடலிறக்கம், கல்லீரல், கணையம், பித்தப்பை கற்கள், உடல் பருமன், சிறுநீரக கோளாறு, மகளிர் நலம் மற்றும் கண், பல் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
03-May-2025