மேலும் செய்திகள்
ஏரியில் மிதந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
23-Nov-2025
சென்னை: 'மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் மூத்த குடிமக்களுக்கான இலவச டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் ஜனவரி 31 வரை வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குரவத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு மாதத்திற்கு, 10 டோக்கன் என, வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தும் வகையில், ஆறு மாத இலவச பயணத்துக்கான டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல், ஜன., 31 வரை வழங்கப்பட உள்ளன. டோக்கன்களை அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர், தி.நகர், சைதாப்பேட்டை, ஆலந்துார், வேளச்சேரி, மாதவரம், திருவொற்றியூர், குன்றத்துார் உட்பட மொத்தம், 42 மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். சென்னையை சார்ந்த மூத்த குடிமக்கள், இலவச டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகளை புதிதாக பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டையுடன், தங்களின் இரு வண்ண புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். இலவச பயண அட்டையை புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், அடையாள அட்டையுடன், தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-Nov-2025