மேலும் செய்திகள்
வாலிபர் கொன்று புதைப்பு நண்பர்கள் 4 பேர் கைது
05-Aug-2025
அரும்பாக்கம், மது போதையில் ஏற்பட்ட தகராறில், நண்பரை பீர் பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 30. இவர், கோயம்பேடு சந்தையில், கூலி தொழிலாளியாக பணிபுரிகிறார். இவரது நண்பர், விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில், 39; கட்டுமான தொழிலாளி. இருவரும், நேற்று முன்தினம் இரவு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில் மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த செந்தில், தான் மது அருந்திய பீர் பாட்டிலை தரையில் உடைத்து, ஆசைத்தம்பியின் கையில் குத்தினார். காயமடைந்த ஆசைத்தம்பி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கையில் ஐந்து தையல் போடப்பட்டது. அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, செந்திலை நேற்று கைது செய்தனர்.
05-Aug-2025