உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளைஞரின் போன், பைக் பறித்த நண்பர்கள் கைது

இளைஞரின் போன், பைக் பறித்த நண்பர்கள் கைது

வேளச்சேரி, இளைஞரை கடத்தி மொபைல் போன், பைக் பறித்த நண்பர்களை, போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராகேஷ், 18; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு வேளச்சேரியில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறு வயது நண்பர்கள் இரண்டு பேர், ராகேஷுடன் பேச்சு கொடுத்தனர். பின், ராகேஷின் பைக்கில் மூன்று பேரும் தரமணி சென்று, அங்குள்ள ஒரு ஹோட்டல் ஊழியர்களை மிரட்டி, இரண்டு சிக்கன் ரைஸ் வாங்கிக்கொண்டு ஆதம்பாக்கம் நோக்கி சென்றனர். அங்கு ராகேஷை மிரட்டி இறக்கிவிட்டு, அவரின் மொபைல் போனை பறித்து, வாகனத்துடன் பள்ளிக்கரணை நோக்கி சென்றனர். பதறிய ராகேஷ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நேற்று அதிகாலை ரோந்து போலீசார், பள்ளிக்கரணை சென்று இரண்டு பேரையும் பிடித்தனர். விசாரணையில், பல்லாவரத்தைச் சேர்ந்த நவீன் குமார், 24, அன்புமணி, 27, என தெரிந்தது. நேற்று, இரண்டு பேரையும் கைது செய்து, பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை