விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சிலை ஊர்வலம்போக்குவரத்து மாற்றம்சென்னை, சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலை பட்டினப்பாக்கம் கடலில் கரைப்பதற்காக கொண்டுவரப்பட உள்ளதால் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார், 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் உள்ள லுாப் சாலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.ஊர்வலம் ரத்னா காபே சந்திப்புக்கு அருகில் வரும்போது ஜாம்பஜார் காவல் நிலையம் வழியாக வரும் வாகனங்கள், ஜானி ஜான் கான் சாலை வழியாக செல்ல வேண்டும். ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வரும் போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா காபே நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை - காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும். மந்தைவெளியிலிருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள், தேவநாதன் தெரு - ஆர்.கே.மட் சாலை வழியாக திருப்பி விடப்படும்.திருவல்லிக்கேணியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலை அருகே வலது புறம் திரும்பி, ஆர்.கே.சாலை வழியாக சென்று பீமனா கார்டன் சந்திப்பில் இடது புறம் திரும்பி, சி.பி.,ராமன் சாலை, ஆர்.கே.மட் சாலை வழியாக செல்லலாம். சாந்தோம் சாலை வழியாக வெளியேறும் வாகனங்கள், காந்தி சிலையிலிருந்து வலதுபுறம் திரும்பி, அமிர்தாஜன் சந்திப்பு, ஆர்.கே.மட் சாலை வழியாக செல்லலாம்.இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.