மேலும் செய்திகள்
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி ஹோட்டலில் தற்கொலை
23-Aug-2025
வடக்கு கடற்கரை, நோட்டமிட்டு, எட்டு லட்சம் ரூபாய் பணத்தை பறிக்க முயன்ற, மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, மண்ணடி, மூர் தெருவைச் சேர்ந்தவர் அர்ஷத் உசேன், 39. இவருடைய சகோதரர், ஆசிக் அலியின் நண்பர்களான தவுபிக், அப்துல் ரசாக் ஆகியோர் கத்தார் நாட்டில் வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் காலை, சென்னை வந்த தவுபிக், அப்துல் ரசாக் ஆகியோர், மண்ணடி, மூர்தெருவில் உள்ள, தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அப்துல் ரசாக், கத்தாரில் இருந்து வாங்கி வந்த, ஐந்து '16 புரோ மாக்ஸ்' ரக மொபைல் போன்களை விற்க, நேற்று முன்தினம் இரவு, அர்ஷத் உசேனுடன் சென்றுள்ளார். பாரிமுனை, ஈவினிங் பஜார் கடையில், மொபைல் போன்களை, எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். பணத்தை பையில் வைத்து, டூ - வீலரில், விடுதிக்கு திரும்பினர். மண்ணடி, ஏர்றா பாலு தெரு சந்திப்பில், சென்று கொண்டிருந்த போது, இரண்டு டூ - வீலர்களில் பின் தொடர்ந்த நான்கு பேர், வழிமறித்து அவர்களிடமிருந்த, எட்டு லட்சம் ரூபாய் இருந்த பையை பறிக்க முயன்றனர். சுதாரித்த இருவரும், டூ - வீலரை சாலையில் போட்டு தப்பியோடினர். சம்பவம் குறித்து, அர்ஷத் உசேன் அளித்த புகாரின் அடிப்படையில், வடக்கு கடற்கரை போலீசார், வழக்கு பதிவு செய்து, பணம் பறிக்க முயன்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
23-Aug-2025