2 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம்
சென்னை :ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், இன்று இரண்டு மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம், நேற்று வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று மதியம் 1:35 மணி முதல், 2:35 மணி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.★ கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான, நண்பகல் 12:30 மணி ரயில், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே, இன்று இயக்கப்படும்★ செங்கல்பட்டு - கடற்கரை இடையேயேன, மதியம் 1:50 மணி ரயில், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து, இன்று இயக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.