உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மினி லோடு வாகனம் மோதி சிறுமி பலி; சகோதரி சீரியஸ்

மினி லோடு வாகனம் மோதி சிறுமி பலி; சகோதரி சீரியஸ்

புளியந்தோப்பு: மினி லோடு வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்தார்; படுகாயமடைந்த அவரது சகோதரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புளியந்தோப்பு, ஜெ.ஜெ.நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பிரேம் குமார், 40. இவரது மகள்களான அபி, 16; பிளஸ் 1 மாணவி. சஞ்சனா, 12; எட்டாம் வகுப்பு மாணவி. விடுமுறை நாளான நேற்று காலை, புளியந்தோப்பு நரசிம்மா நகர், புது பாலம் அருகே குப்பை கொட்டி, அங்கிருந்த பைக்கில் அமர்ந்திருந்தனர். அப்போது, திரு.வி.க., நகர் ஏழாவது தெருவைச் ஜெயகுமார், 22, என்பவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பாபு, 45, என்பவரின் மினி லோடு வாகனத்தை இயக்க முயன்றார். 'பிரேக்' பிடிப்பதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த லோடு வாகனம், பைக்கில் அமர்ந்திருந்த இரண்டு சிறுமியர் மீது மோதியது. இதில், இருவரும் துாக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி சஞ்சனா ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. சிறுமி அபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி சஞ்சனாவின் மறைவால் அவரது உறவினர்கள், புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி