உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  40 சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைப்பு

 40 சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைப்பு

சென்னை: வெயில் அதிகரிக்க துவங்கி விட்டதால், சென்னையில், 40 சிக்னல் சந்திப்புகளில் பசுமை பந்தலை மாநகராட்சி அமைத்து வருகிறது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை ஓரளவு பாதுகாக்கும் வகையில், 2024ம் ஆண்டு முதல், சாலை சிக்னல் சந்திப்புகளில், பசுமை பந்தல் அமைக்கும் பணியில், சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. கடந்தாண்டு 18 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டன. இந்தாண்டு கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், 40 சாலை சிக்னல் சந்திப்புகளில், பசுமை பந்தல்களை மாநகராட்சி அமைத்து வருகிறது. இதில், எட்டு இடங்களில் பணிகள் முடிந்துள்ளன; மற்ற இடங்களில் பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !