உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜி.எஸ்.டி., அலுவலகம் முற்றுகை

ஜி.எஸ்.டி., அலுவலகம் முற்றுகை

சென்னை, கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி., வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வியாபாரிகள் சங்க பேரவையை சேர்ந்தவர்கள், சென்னை நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி., அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர்.போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'கடை வாடகைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,வரி விதிப்பு, சிறு வணிகர்களை அதிகம் பாதிக்கும்; ஏற்கனவே, ஆன்லைன் வணிகத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள், இந்த வரியால் மேலும் பாதிக்கப்படுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி