உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குருநானக் கல்லுாரி அணி டி20 கிரிக்கெட்டில் சாம்பியன்

 குருநானக் கல்லுாரி அணி டி20 கிரிக்கெட்டில் சாம்பியன்

சென்னை: கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி - 20' கிரிக்கெட் போட்டியில், குருநானக் கல்லுாரி மாணவியர் அணி, சாம்பியன் கோப்பையை வென்றது. ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான ஜி.ஆர்., கோப்பைக்கான 'டி - 20' கிரிக்கெட் போட்டி, முகப்பேரில் கடந்த 24ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதன் முதல் அரையிறுதியில், குருநானக் கல்லுாரி அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ராணிமேரி கல்லுாரியை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில், ஜெபாஸ் கல்லுாரி அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சவீதா கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில், குருநானக் மற்றும் ஜெபாஸ் கல்லுாரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜெபாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி, அடுத்து களம் இறங்கிய குருநானக் கல்லுாரி, துவக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 12.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, 85 ரன்கள் சேர்த்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாம்பியன் போப்பையை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி