உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்க்கிங் இல்லாத மண்டபங்கள் தனியார் மருத்துவமனைகளால் சிரமம்

பார்க்கிங் இல்லாத மண்டபங்கள் தனியார் மருத்துவமனைகளால் சிரமம்

திருவொற்றியூர்,திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி முதல் விம்கோ நகர் வரை, 10க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன.இதன் காரணமாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மிகுதியாக இருக்கும். இது மட்டுமல்லாது, மக்கள் நடமாட்டமும் அதிகம் இருக்கும்.இந்நிலையில், சில தனியார் மருத்துவமனைகள், மண்டபங்கள், வணிக வளாகங்களில், முறையான பார்க்கிங் வசதியில்லாததால், பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இலகுரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர்.சிலர், மெட்ரோ ரயில் துாண்களின் இடையே, வாகனங்கள் திரும்பும் இடைவெளிகளில் வரிசைக்கட்டி பைக்குகளை நிறுத்தி வைத்திருப்பதால், வாகனங்களை திருப்பக்கூட முடிவதில்லை. பாதசாரிகளும் சாலையை கடந்து செல்ல முடியவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பார்க்கிங் வசதி இல்லாத வணிக வளாகங்கள், மண்டபங்கள், மருத்துவமனைகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.மேலும், மெட்ரோ துாண்களின் இடைவெளிகளில் நிறுத்தப்படும் பைக், ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !