உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி பாபுராயன்பேட்டை கோவிலில் ஆய்வு
அச்சிறுபாக்கம், “தேசிய பாரம்பரியசின்னமான விஜய வரதராஜ பெருமாள் கோவிலை பாதுகாக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டாதது, துர திர்ஷ்டவசமானது.“கோவில் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாகப் பின்பற்றாவிட்டால் அறநிலையத்துறை கமிஷனரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்,”என, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன் தினம் எச்சரித்தது.இதையடுத்து, நேற்று பாபுராயன்பேட்டை விஜய வரதராஜ பெருமாள் கோவிலில், இணை ஆணையர் குமரகுரு, செங்கல்பட்டு உதவி ஆணையர் ராஜலட்சுமி, காஞ்சிபுரம் உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், செங்கல்பட்டு உதவி பொறியாளர் முருகவேல், அச்சிறுபாக்கம் கோவில் செயல் அலுவலர் தமிழரசி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.பின், கோவில் உட் பிரகார வளாகத்தில் உள்ள செடி, கொடிகள் மற்றும் புதர்களை ஜே.சி.பி.,இயந்திரம் வாயிலாகஅப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கோவில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.