உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹிந்தி பெயர் பலகை மெட்ரோவில் சர்ச்சை

ஹிந்தி பெயர் பலகை மெட்ரோவில் சர்ச்சை

சென்னை, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கும்போது, மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பெயர் பலகைகள் இருந்தன. இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின்படி, அனைத்து நிலையங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே, பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகள் இடம் பெற்று வருகின்றன.இதற்கிடையே, அசோக் நகர் மெட்ரோவின் வெளிப்புற பகுதியில் ஒரு இடத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் பெயர் பலகை இருந்தது. இது, நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம், நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்தவுடன், ஹிந்தியில் இடம் பெற்றிருந்த எழுத்துகள் வெள்ளை ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை