ஏப்., 14 வரை தோட்டக்கலை பயிற்சி வகுப்பு
சென்னை: 'பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, 30 உதவியாளருக்கான தாவர நாற்றங்கால் அமைத்தல், மேலாண்மை குறித்த களப்பயிற்சி உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நேற்று துவங்கின. ஏப்., 17ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சியில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்; கட்டணம் கிடையாது. பயிற்சி பெற விரும்புவோர், தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், அருள் நகர், மாதவரம், சென்னை - 51 என்ற அலுவலகத்தில், ஆதார் அட்டையுடன் நேரடியாகவோ, 99442 09417, 84897 42975 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.