உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சங்கரா, சீலா ரக மீன்கள் விலை: காசிமேடில் எகிறியது

 சங்கரா, சீலா ரக மீன்கள் விலை: காசிமேடில் எகிறியது

காசிமேடு: காசிமேடில் வவ்வால் மீன்கள் கிலோ 1,700 ரூபாய்க்கும், சங்கரா, சீலா உள்ளிட்ட சிறிய ரக மீன்கள் கிலோ 500 ரூபாய்க்கும் மேல் நேற்று விற்பனையானது. இதனால், வழக்கம்போல அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். காசிமேடு மீன்பிடி சந்தையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்க அதிகளவில் மக்கள் கூடுவர். கடந்த ஏப்., 15ம் தேதி மீன்பிடித் தடைகாலம் தொடங்கியது. அந்த மாதம் முதல் மீன் விலை கணிசமாக உயர்ந்தது. கடந்த வாரத்தில் மட்டும், மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 70 மீன்பிடி விசைப்படகுகள் கரை திரும்பின. ஆனால், மீன் வரத்து குறைவாக இருந்தது. இதனால், விலை கடுமையாக உயர்ந்து விற்பனையானது. உயர்ரக ஐ வவ்வால் மீன் கிலோ 1,700 ரூபாய்க்கும், வஞ்சரம், கருப்பு வவ்வால் மீன், டைகர் இறால் கிலோ 1,300 ரூபாய் வரையும் விற்பனையானது. இதனால், வழக்கம்போல அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். காசிமேடில் நேற்றைய விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) ஐ வவ்வால் 1,500 - 1,700 வஞ்சரம் 1,200 - 1,300 கருப்பு வவ்வால் 1,200 - 1,300 டைகர் இறால் 1,200 - 1,300 சீலா 600 - 700 பாறை 600 - 700 சங்கரா 400 - 500 கடல் விரால் 700 - 800 இறால் 500 - 600 நண்டு 600 - 700


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்