உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹியூமர் கிளப் வெள்ளி விழா கொண்டாட்டம்

ஹியூமர் கிளப் வெள்ளி விழா கொண்டாட்டம்

சென்னை, மாதம் தோறும் நகைச் சுவை சந்திப்புகளை நடத்தி வரும், பெசன்ட் நகர் ஹியூமர் கிளப்பின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், திருவான்மியூர் நடந்தது. கிளப் தலைவர் குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வி.கே.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஆகஸ்ட் மாத கூட்டமாக நடந்த இந்த கொண்டாட்டத்தில், இடையிடையே பெய்த மழையை மறைக்கும் வகையில், உறுப்பினர்களின் நகைச்சுவை பேச்சு அரங்கை கலகலப்பாகியது. விழாவில், 'தினமலர்' அந்துமணி எழுதிய நுால்களை, என்.சி.மோகன்தாஸ் அனைவருக்கும் பரிசளித்தார். நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள் சிவகாமசுந்தரி, நுாருல்லா, வெங்கடேஷ், ஹுமர் கிளப் ஏ.குமார், ஹியூமர் கிளப் செயலர் பாரதி மகாதேவன், என்.ஆர்.சம்பத், உமா, அஸ்வினி பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ