மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
சென்னை: ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டியில், தமிழக வீரர் சாம்பியன் கோப்பையை வென்றார். 'சக்தி குரூப்' ஆதரவில், தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, போரூரில் நேற்று நிறைவடைந்தது. போட்டியில், இந்தியாவின் ஐந்து பேர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் என 10 பேர் மோதினர். நேற்று காலை நடந்த இறுதிச்சுற்றான ஒன்பதாவது சுற்றில், இந்தியாவின் அர்னாவ் மற்றும் சாம்யக் தாரிவ் நேருக்கு நேர் மோதினர். போட்டி 'டிரா'வில் முடிந்தது. இதனால், தலா ஏழு புள்ளிகள் பெற்ற இருவரும் ஐ.எம்., நார்ம் சான்றிதழை உறுதி செய்தனர் . இதுவரை நடந்த ஒன்பது சுற்றுகளிலும், இருவரும் தலா ஐந்து வெற்றி, நான்கு டிரா செய்து தங்கள் வலிமையை நிரூபித்து இருந்தனர். ஆட்டம் முடிவில், 'டைரக்ட் என்கவுண்டர்' எனும் 'டை - பிரேக்' விதிமுறை செயல்படுத்தப்பட்டதில், தமிழகத்தின் அர்னாவ் முன்னிலை பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். மூன்றாம் இடத்தை, 6.5 புள்ளிகளுடன் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் எவ்ஜெனி பொடோல் சென்கோ பெற்றார்.
30-Sep-2025