மேலும் செய்திகள்
ரூ.3.66 கோடி நிலமோசடி பெண் உட்பட இருவர் கைது
13-Mar-2025
ஆவடி, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரையடுத்த, வல்லுார் லட்சுமி கோவிலை தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரி, 64. இவருக்கு விச்சூரில், 3,600 நிலத்தை, 1985 ல், செல்வநாதன் என்பவரிடம் இருந்து கிரையம் பெற்று அனுபவித்து வந்தார். இந்நிலையில், செல்வ நாதனின் மகன் தமிழ்ச்செல்வன் என்பவர், மேற்கூறிய நிலத்தின் நகலை கொண்டு, கோட்டீஸ்வரி இறந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார்.பின், கோட்டீஸ்வரியின் மகள்கள் சவ்பாக்கியவதி, அம்சவேணி போல் ஆள்மாறாட்ட நபர்கள் வாயிலாக, கடந்த 2022 ல், அவரது பெயரில், திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகாரம் பெற்றுள்ளார். கடந்த 2023 ல், கோட்டீஸ்வரி, அந்த நிலத்தை சுத்தம் செய்ய சென்றபோது, தமிழ் செல்வன் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. நிலத்தின் மதிப்பு 30 லட்சம் ரூபாய்.இதுகுறித்து விசாரித்த தனிப்படை போலீசார், தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலரை கைது செய்த நிலையில், மோசடிக்கு உதவியாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர்.நேற்று, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த சவுபாக்கியவதி, 42 ; ரேகா, 36 ; அயனாவரத்தைச் சேர்ந்த அம்சவேணி, 38, மீஞ்சூரைச் சேர்ந்த விமல்குமார், 42 ஆகிய நான்கு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
13-Mar-2025