உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு குப்பையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய்

கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு குப்பையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய்

கோயம்பேடு:கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது.சந்தைக்கு தினமும், 7,000 டன் காய்கறி தேவை உள்ள நிலையில், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளால், 9,000 டன் காய்கறிகள் வந்துள்ளன. இதனால், சில காய்கறிகள் தவிர, அனைத்து காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது.இதில், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் திண்டிவனம், கடலுார், மதுராந்தகம், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிக அளவில் கத்தரிக்காய் வரத்து உள்ளது.சந்தைக்கு, தினமும் 150 டன் கத்தரிக்காய் தேவையுள்ள நிலையில், சில நாட்களாக, 300 டன் கத்தரிக்காய் வரத்து உள்ளது.இதனால், கத்தரிக்காய் விலை குறைந்து, 8 - 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதையடுத்து, விற்பனையின்றி தேங்கி அழுகும் கத்திரிக்காய், குப்பையில் கொட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ