உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒருங்கிணைந்த சேவை மையம் மாற்று திறனாளிகளுக்கு திறப்பு

ஒருங்கிணைந்த சேவை மையம் மாற்று திறனாளிகளுக்கு திறப்பு

பெருங்குடி, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான விழுதுகள் சேவை மையம், பெருங்குடி நகர்ப்புற சுகாதார மையத்தில், நேற்று துவக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான நலதிட்டங்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், உலக வங்கி நிதி உதவியுடன், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெற, வட்டாட்சியரை அணுகுவது, மருத்துவரை அணுகுவது என அலைந்து திரிய வேண்டி இருந்தது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம், காலை சென்றால் பிற்பகலுக்குள் சான்றிதழ் கிடைக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 15 மண்டலங்களில், பெருங்குடி மண்டலத்தில் முதன் முறையாக, மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த மறு வாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு குடையின் கீழ் அனைத்து சேவைகளும் கிடைக்கும் வகையில், இம்மையம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தென் சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் உட்பட பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை