சர்வதேச கூட்டுறவு தினம்: வரும் 6ல் மாரத்தான்
சென்னை, கூட்டுறவு துறை சார்பில், சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு தினத்தை கொண்டாடும் வகையில், மாரத்தான் ஓட்டம் வரும் ஜூலை 6ம் தேதி காலை, 5:30 மணிக்கு, சென்னை தீவுத்திடலில் துவங்குகிறது.இப்போட்டி, 18 வயது முதல், 40 வயது வரை ஒரு பிரிவாகவும், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றொரு பிரிவாகவும், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. மாரத்தானில் பங்கேற்க, https://www.tncu.tn.gov.in/marathon/register என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நுழைவு கட்டணம், 100 ரூபாய்.போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ், டி - சர்ட், சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். முதல் பரிசாக, 30,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 20,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 10,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.