சாலையோரம் இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை
சேலையூர், தாம்பரம் - வேளச்சேரி சாலையில், சந்தோஷபுரம் வனத்துறை அலுவலம் அருகே, நேற்று முன்தினம் இரவு, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சாலையோரமாக இறந்து கிடந்தார்.ரோந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த நபர் யார், எந்த ஊர் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை.உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இது குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.