உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை

வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை

பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆங்கில புத்தாண்டு பிறப்பின்போது, லட்சக்கணக்கானோர் பல மணிநேரம் பல கி.மீ., துாரம் வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.இக்கோவிலின் குளக்கரையில் காரிய மண்டம் ஒன்று அமைந்துள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அங்கு முன்னோர்களுக்கு காரியம் செய்யப்படுகிறது. அங்கு காரியம் செய்ய, 60 ரூபாய் மட்டுமே, கட்டணமாக மக்களிடம் வசூலிக்க வேண்டும்.கடந்த ஆட்சியின்போதே, அந்த இடத்தை அறநிலையத்துறை வசம் மாநகராட்சி ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. மாறாக ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. அவர்கள், 5,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்தனர்.இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல, உள்ளூர் ஆளுங்கட்சியினர் கைக்கு மாறியது. முன்பு அந்த கட்சியினர் வசூலித்தனர். தற்போது, ஆளுங்கட்சியினர் வசூலிப்பதாக பரவலான குற்றச்சாட்டு எழுகிறது. இது குறித்து எதிர்க்கட்சியினர் வடபழனி முழுதும் 'போஸ்டர்' அடித்து ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவிர்க்க வேண்டும்

இதுகுறித்து, ஆன்மிகநல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது:முன்னோர்களுக்கு ஓடும் நீர்நிலைகளின் கரையில் தான் காரியம் செய்ய வேண்டும். அல்லது வீடுகளில் செய்யலாம். புனிதமான கோவில் முகப்பில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடந்து செல்லும் பகுதியில் காரிய மண்டம் அமைத்ததே தவறு.அங்கு காரியம் செய்து முன்னோர்களுக்கு வழங்கிய உணவு உருண்டைகள், பக்தர்களின் காலணியால் மிதிக்கப்படுகின்றன. இதனால், காரியம் செய்ததற்கான பலன் இம்மி அளவும் கிடைக்காது. அதனை மக்கள் உணர்ந்து, அங்கு காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும், சென்னை மாநகராட்சியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, அனைத்து எரியூட்டு, தகன மையங்களிலும் இலவசமாக சேவையாற்றப்படுகிறது. ஆனால், இறந்தவர்களுக்கு காரியம் செய்ய, இங்கு ஆளுங்கட்சியினருக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இது ஆளுங்கட்சிக்கு மேலும் மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும்.புனிதமான கோவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் இருந்து காரிய மண்டபத்தை உடனடியாக அகற்றி, இப்பிரச்னைக்கு மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜன 08, 2025 20:51

முன்பே சுடுகாட்டு ஊழல் என்ற ஊழலில் ஒரு கட்சியின் அமைச்சருக்கும் ஓர் அதிகாரிக்கும் பதவியே போயிற்று திரும்பவும் அந்த ஊழல் திரும்பவும் தலை தூக்கவிடாமல் மக்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்


Yaro Oruvan
ஜன 08, 2025 14:06

சுடுகாட்டுலயும் காசு ஆட்டயபோடுறானுவ தீயமுகவினர்.. பின்ன தல எவ்வழி குண்டன் சாரி தொண்டன் அவ்வழி.. அந்தாளு சாவு வீட்டுல அரசியல் பேசுவான்.. இவனுவ எழவு காரியத்துல காசு அடிக்கிறானுவ.. மொத்தத்துல சின்ன சந்துல கூட சிந்து பாடுவான் தீயமுகக்காரன்


அப்பாவி
ஜன 08, 2025 09:09

காரியமெல்லாம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. பிரிந்தவர்கள் பேரில் நாலு பிராணிகளுக்கு உணவளியுங்கள். ரெண்டு மரம் நடுங்கள். தெரு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை