| ADDED : செப் 06, 2026 04:52 PM
காசிமேடு: வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், காசிமேடு மீன்களின் சற்று அதிகரித்துள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி சந்தையில், நாளொன்றுக்கு, 150 டன் மீன்கள் கையாளப்படுகிறது. ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில், 350 – 600 டன் அளவிற்கு மீன்கள் வரத்து இருக்கும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை, வரத்து குறைவால், அசைவ பிரியர்கள் விரும்பிய மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். வெளிமாநில மீன்கள் வரத்து குறைவு, படகு ஒன்றிற்கு உணவு மீன்கள் தவிர்த்து, 5 – 10 டன் கழிவு மீன்கள் பிடிபடுதல் மற்றும் ஆடி மாத அம்மன் கூழ்வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், காசிமேடு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. வஞ்சிரத்திற்கு இணையாக விலை நிர்ணயமாகும் வெள்ளை வவ்வால், ஐ – வவ்வால் போன்ற மீன்கள் வரத்து இல்லை. வரும் 18ம் தேதி புரட்டாசி மாதம் துவங்கும் நிலையில், அசைவ உணவை பலரும் தவிர்ப்பர். அப்போது மீன்கள் விலை கணிசமாக குறையும். மீன்கள் விலை (ரூ.) வஞ்சிரம் – பெரியது 1,200 – 1,400 வஞ்சிரம் – சிறியது 900 – 1,000 கருப்புவவ்வால் 1,000 – 1,100 டைகர் இறால் 1,100 – 1,200 சங்கரா 400 – 500 அயிலா 200 – 300 பாறை 600 – 700 கடல் விரால் 700 – 800 தும்புளி 200 – 250 கடம்பா 250 – 300 இறால் 500 – 600 வரி நண்டு 600 – 700 நண்டு 400 – 500