உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலில் தவறி விழுந்த ஐ.டி.ஐ., மாணவர் பலி

கடலில் தவறி விழுந்த ஐ.டி.ஐ., மாணவர் பலி

எண்ணுார்:எர்ணாவூர், ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பரத், 17; ஐ.டி.ஐ., மாணவர். இவர், நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து, எண்ணுார் - நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள துாண்டில் வளைவிற்கு சென்றுள்ளார்.அங்கு வார்ப்பு பகுதியில், நண்பர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பரத், வார்ப்பின் நுனி பகுதிக்கு சென்று கால் நனைக்க முற்பட்ட போது, திடீரென கால் இடறி கடலில் விழுந்து மாயமானார்.மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், மாயமான சிறுவனை தேடும் பணியில் எண்ணுார் போலீசார் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்த நிலையில், நேற்று முன்தினம் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.இந்த நிலையில், நேற்று காலை பரத்தின் உடல் கரை ஒதுங்கியது. எண்ணுார் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை