மேலும் செய்திகள்
மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னை அணி சாம்பியன்
28-Oct-2025
சென்னை:திருவள்ளூரில் நடந்த மாநில பள்ளிகளுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி மாவட்டத்தின் ஸ்ரீகிருஷ் இன்டர்நேஷனல் பள்ளி அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திரா காந்தி அறக்கட்டளை மற்றும் திருவள்ளூர் தடகள சங்கம் சார்பில், 7வது இந்திரா காந்தி மெமோரியல் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, திருவள்ளூர் விளையாட்டு திடலில் நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, 6 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி அணிகள் மற்றும் தனிநபர் பிரிவில், மொத்தம் 300க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். 12, 14, 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் ஓபன் பிரிவில் போட்டிகள் நடந்தன. இதில் அசத்திய காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீகிருஷ் இன்டர்நேஷனல் பள்ளி அணி, அதிக புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை, திருவள்ளூர் மாவட்டத்தின் பாரதிதாசன் பள்ளி பிடித்தது. -
28-Oct-2025