உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூலி தொழிலாளி பெண் பலாத்காரம் கேரள வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

கூலி தொழிலாளி பெண் பலாத்காரம் கேரள வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: கூலி வேலைக்கு செல்ல காத்திருந்த பெண்ணை, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என, அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கேரள மாநில வாலிபருக்கு, எழும்பூர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாஜிவ், 32; லாரி கிளீனர். இவர், சில மாதங்களுக்கு முன், விருகம்பாக்கம் மார்க்கெட் பகுதியில், கூலி வேலைக்கு செல்ல காத்திருந்த 40 வயது பெண்ணை, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் எனக்கூறி, தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின், அந்த பெண்ணை தி.நகர் அழைத்துச் சென்று விட்டு விட்டு, சாஜித் மாயமானார். புகாரின்படி இவரை, கோயம்பேடு போலீசார் தேடி வந்தனர். இவரின் படம், வழக்கு விபரங்கள் குறித்து, சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில், 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கத்தி முனையில் நகை பறித்தது தொடர்பாக, அம்மாவட்ட போலீசார் சாஜிவ்வை கைது செய்தனர். அது பற்றி, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு போலீசார் அவரை கைது செய்தனர். இவர் தொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில், தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சாஜிவ்க்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, அரசுக்கும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை