மேலும் செய்திகள்
பனியன் தொழிலில் ஏ.ஐ., தொழில்நுட்பம்
12-Jan-2025
சென்னை ஆசியா அளவில் பிரமாண்ட 'லெதர் பேஷன் ஷோ' சென்னையில் நேற்று நடந்தது.சென்னை, கிண்டி ஐ.டி.சி., கிராண்ட் சோழா ேஹாட்டலில், 'இந்திய பினிஷ்டு' தோல் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், 'லெதர் பேஷன் ஷோ - 25' நேற்று நடந்தது. இதில், 10 முன்னணி நிறுவனங்களின் 70க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் மாடல்கள் பங்கேற்றனர். நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தோலில் தயாரித்த 13 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவர்களின் 'ரேம் வாக்' பார்வையாளர்களை கவர்ந்தது.இது மட்டுமின்றி சின்ன குழந்தைகளும் இந்த பேஷன் ஷோவில் பங்கேற்று அசத்தினர். நிகழ்வில், நாட்டின் சிறந்த பேஷன் ஷோவிற்கான விருது பெற்ற மாடல் கலைஞர்களும் இதில் கவுரவிக்கப்பட்டனர்.இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் கூறியதாவது:தோல் பொருட்களின் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளை காண, உலகில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் தனித்துவம் மற்றும் புதுமையான வடிவமைப்புகளை கொண்டது. போர்ஸ் மற்றும் லம்போர்கினி போன்ற பிரபல கார்களும் இந்த பேஷன் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள், சர்வதேச அளவில் வெளிவந்து பெருமை சேர்க்கும் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
12-Jan-2025