மேலும் செய்திகள்
மின்கம்பங்களில் செடி, கொடிகள் அகற்றம்
28-Aug-2024
திருவொற்றியூர், கார்கில் நகர் கழிவெளி நிலம் மின்மோட்டார் அறை அருகே, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி தார்ச்சாலையோரம் மின்மாற்றி உள்ளது. இது நிறுவப்பட்டுள்ள பகுதி, நீரோட்டமுள்ள பகுதி என்பதால், ஸ்திரத்தன்மையின்றி உள்ளது.இதன் காரணமாக, மின்மாற்றி தார்ச்சாலையை நோக்கி சாய்ந்தபடி உள்ளது. மேலும், மின்மாற்றியை சுற்றிலும், செடி கொடிகள் படர்ந்து, ஊழியர்கள் அருகே நெருங்க முடியாத நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின்மாற்றியில் படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றி, கீழே விழுந்து விடாதபடி நிலைநிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.சரண், 32, திருவொற்றியூர்.
28-Aug-2024