உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேலுார் நருவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று சிகிச்சை பிரிவு

வேலுார் நருவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று சிகிச்சை பிரிவு

சென்னை, வேலுார் நருவீ மருத்துவமனையில், கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவை, மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் துவக்கி வைத்தார். வேலுாரில் இயங்கி வரும் நருவீ மருத்துவமனை, மருத்துவ சேவை அளிப்பதில் முன்னோடியாக விளங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில், பல ஆயிரம் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து சிறந்து விளங்கும், 'எல் கியூப்' மருத்துவ குழுவுடன், வேலுார் நருவீ மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், நருவீ மருத்துவமனை தலைவர் சம்பத், 'எல் கியூப்' நிறுவன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன்படி, டாக்டர்கள் ஜாய் வர்கீஸ், விவேக் விஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர், நருவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை அளிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி