உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாட்டரி விற்பனை ஒருவர் கைது

லாட்டரி விற்பனை ஒருவர் கைது

கே.கே., நகர்:கே.கே., நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கே.கே., நகர் ஆற்காடு சாலை மற்றும் வன்னியர் தெரு சந்திப்பில் உள்ள பூக்கடையில் சோதனை செய்தனர்.இதில், வெளிமாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், 39, என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து, ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கோயம்பேடு சந்தை அருகே உள்ள லாடஜில் தங்கியுள்ள வேல்முருகன், வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்ணை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து, அதன் முடிவுகளை மொபைல் போன் வாயிலாக பார்த்து, சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ