உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உச்சா தகராறு கடைக்காரரை தாக்கியவர் கைது

உச்சா தகராறு கடைக்காரரை தாக்கியவர் கைது

பாண்டி பஜார், தி.நகர், தர்மாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் கோபால், 52. இவர், தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, கண்ணையா தெரு சந்திப்பில், நடைபாதையில் பைக் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.கடந்த 17ம் தேதி கோபால் கடையில் பணி செய்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் கடையின் அருகே சிறுநீர் கழித்தார்.இது குறித்து கோபால் தட்டிக் கேட்டார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த நபர், கடையில் இருந்து இரும்பு ராடை எடுத்து கோபாலை தாக்கி தப்பி சென்றார்.இது குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரித்தனர். அதன்படி கோபாலை தாக்கிய தி.நகர் பார்த்தசாரதிபுரத்தைச் சேர்ந்த ஏகாம்பரம், 32, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை