மேலும் செய்திகள்
பணம் பறித்த வாலிபர் கைது
04-Dec-2024
துரைப்பாக்கம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள் அருகில், டீ, ஜூஸ் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 35 வயது மதிக்கத்தக்க நபர், கத்தியை காட்டி மிரட்டி, ஒவ்வொரு கடையாக மாமூல் கேட்டுள்ளார்.தராத நபர்கள் கழுத்தில் கத்தியை வைத்து, கொன்று விடுவேன் என மிரட்டி பணம் பறித்துள்ளார். டீ குடித்துக் கொண்டிருந்த முகமது நசீர், 30, என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்தார்.பின், அங்கிருந்து தப்பி செல்ல முயன்றபோது, பின்னால் சென்ற முகமது நசீர், கத்தியை தட்டிவிட்டு, அவரை மடக்கி பிடித்து, அருகில் நின்றோர் உதவியுடன், துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் கண்ணகி நகரை சேர்ந்த ராஜுபாய், 35, என தெரிந்து. அவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
04-Dec-2024