உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துபாய் செல்ல போலி விசா தயாரித்து ஏமாற்றியவர் கைது 

துபாய் செல்ல போலி விசா தயாரித்து ஏமாற்றியவர் கைது 

ஆவடி: துபாய் செல்ல போலி விசா தயாரித்து கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 26. இவர், 'ஆன்லைன்' வாயிலாக அறிமுகமான 'பெர்பெக்ட் மேன் பவர் கன்சல்டன்ட்' உரிமையாளர் சேரலாதன், 49; என்பவரை தொடர்பு கொண்டு, துபாய் செல்ல விசா வாங்கி தரும்படி கூறியுள்ளார். அதற்காக, கடந்த ஜூன் மாதம், ஆவடி சிந்து நகரில் உள்ள சேரலாதன் அலுவலகத்தில் வைத்து 1.30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன்படி, சேரலாதன் 'இ - விசா, டிக்கெட்' எடுத்து ஆகாஷுக்கு அனுப்பியுள்ளார். கடந்த ஜூலை 10ம் தேதி, அதை எடுத்து கொண்டு, துபாய் செல்ல சென்னை விமான நிலையம் சென்றபோது, விசா போலியானது எனக்கூறி, ஆகாஷை திருப்பி அனுப்பியுள்ளனர். இது குறித்து சேரலாதனிடம் கேட்ட போது, 'பணத்தை திருப்பி தர முடியாது' என கூறியுள்ளார். இது குறித்து, ஆவடி போலீசாரிடம் ஆகாஷ் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், சேரலாதனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை