உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிஜிட்டல் கைது செய்ததாக கூறி ரூ.16.5 லட்சம் பறித்தவர் கைது

டிஜிட்டல் கைது செய்ததாக கூறி ரூ.16.5 லட்சம் பறித்தவர் கைது

சென்னை, கொளத்துார், விவேகானந்தன் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜ்குமார், 37; ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.கடந்த மாதம், 16ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், 'நாங்கள் டில்லி சைபர் கிரைம் தலைமையகத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் மீது போதை பொருள் கடத்தல் மற்றும் ஆபாசமான வீடியோக்களை பகிர்ந்ததாக புகார் வந்துள்ளது. 'உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்ப வேண்டும். விசாரணைக்கு பிறகு திரும்ப அனுப்புவோம்' எனக்கூறி, 16.5 லட்சம் ரூபாய் பெற்றனர்.அதன் பிறகே, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம், கடந்த மாதம், 21ம் தேதி புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட, துாத்துக்குடி மாவட்டம், மகிழ்ச்சிபுரம் சிதம்பரம் நகரைச் சேர்ந்த ஆனந்தகுமார், 43 என்பவரை கைது செய்தனர். அவரது மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர்.கைதான ஆனந்த்குமார், சைபர் கிரைம் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து, மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர், 25 வங்கி கணக்குகளை தொடங்கி, ஏமாற்றப்பட்ட நபர்களிடம் இருந்து, 60 லட்சம் ரூபாயை வாங்கி கொடுத்து, 3 சதவீதம் கமிஷன் தொகையை, சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை