ரயிலில் போன் பறித்தவர் கைது
வியாசர்பாடி, வியாசர்பாடியில் இருந்து பேஷன் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்து சென்ற மங்களூர் எஸ்பிரஸ் ரயிலில், பயணியர் ஒருவரிடம் மர்ம நபர் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டார். பெரம்பூர் ரயில்வே போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த பரத்குமார், 19, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.