உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சக ஊழியரின் மொபைல் போன் திருடியவர் கைது

சக ஊழியரின் மொபைல் போன் திருடியவர் கைது

நொளம்பூர் :வேலுார், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவினாஷ், 25, சீனிவாசன், 49. இருவரும், முகப்பேர் மேற்கு பகுதியில் தங்கி, காவலாளியாக பணியாற்றி வருகின்றனர்.இருவரும், கடந்த 21ம் தேதி இரவு ஒன்றாக மது அருந்தி உள்ளனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அவினாஷின் மொபைல் போன் மற்றும் 500 ரூபாய் திருடு போனது தெரிந்தது.இது குறித்து நொளம்பூர் போலீசில் அவினாஷ் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், சீனிவாசன் மொபைல் போன் மற்றும் பணத்தை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த நொளம்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ