இரும்பு பைப் திருடியவர் கைது
ஆர்.கே.நகர், சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மதன்குமார், 37. இவர் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். நேற்று பர்னிச்சர் கடையில், மர்ம நபர் சுவர் மீது ஏறி குதித்து, கடையிலிருந்த பழைய இரும்பு பைப்களை திருடி செல்லும்போது, அவ்வழியே வந்த மதன்குமார் தன் நண்பர்களுடன், மர்ம நபரை பிடித்து, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், வண்ணாரப்பேட்டை, வ.உ.சி.நகரை சேர்ந்த கார்த்திக், 26 சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஓராண்டிற்கு முன்பு மதன்குமாரின் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கார்த்திக் நடவடிக்கை சரியில்லாததால் வேலையை விட்டு நீக்கியுள்ளார். அந்த ஆத்திரத்தில் கடையில் நுழைந்து கார்த்திக் திருடியுள்ளார். ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்கை கைது செய்தனர்.