உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரெடிட் கார்டு வாயிலாக 9 பேரிடம் ரூ.1.35 கோடி  லபக்கியவர் சிக்கினார்

கிரெடிட் கார்டு வாயிலாக 9 பேரிடம் ரூ.1.35 கோடி  லபக்கியவர் சிக்கினார்

ஆவடி, பண ஆசைகாட்டி ஒன்பது பேரிடம், அவர்களின் கிரெடிட் கார்டு பணப்பரிவர்த்தனை வாயிலாக 1.35 கோடி ரூபாய் எடுத்து, மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42; தனியார் நிறுவன ஊழியர். இதே நிறுவனத்தில் 2021 - 2024 வரை பணிபுரிந்தவர் பாடியநல்லுாரைச் சேர்ந்த குமரேசன், 52.அப்போது சக ஊழியர்களிடம் குமரேசன், 'கிரெடிட் கார்டு வாயிலாக பண பரிவர்த்தனை செய்தால், 2 சதவீதம் 'கமிஷன்' கிடைக்கும். அதில், ஒரு சதவீதம் கமிஷன் உங்களுக்கு தந்து விடுவேன்' என, ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில், கிருஷ்ணமூர்த்தி உட்பட ஒன்பது பேர் தங்கள் கிரெடிட் கார்டை குமரேசனிடம் கொடுத்துள்ளனர்.கிரெடிட் கார்டை பெற்றுக் கொண்ட குமரேசன், அவற்றை பயன்படுத்தி, 1.35 கோடி ரூபாய் எடுத்துள்ளார். பின், கிரெடிட் கார்டுக்கு முறையாக பணத்தை கட்டாமல், அனைவரையும் ஏமாற்றி வந்துள்ளார்.பணம் கட்டுவது குறித்து கேட்கும்போது, குமரேசன் முறையாக பதில் அளிக்கவில்லை. அப்போது தான், ஏமாற்றப்பட்டதை அனைவரும் உணர்ந்தனர். இது குறித்து, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான தனிப்படை போலீசார், சேலம் மாவட்டம், தென்னங்குடி பாளையம் கிராமத்தில் பதுங்கி இருந்த குமரேசனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !